ராமதாஸ் உடன் பாமக நிர்வாகிகள் சந்திப்பு பா.ம.க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025
ராமதாஸ் உடன் பாமக நிர்வாகிகள் சந்திப்பு
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனிடையே அன்புமணி ராமதாஸ் மீது, டாக்டர் ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் விழுப்புரம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை கட்சியின் மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-06-01 05:37 GMT