ஓரணியில் தமிழ்நாடு; புதிய உறுப்பினர் சேர்க்கை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025

ஓரணியில் தமிழ்நாடு; புதிய உறுப்பினர் சேர்க்கை திட்டம் - மு.க.ஸ்டாலின்

திமுக பொதுக்குழுவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது:-

நமது மண், மொழி, மானம் காத்திடவும் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடும் பொருட்டு “ஓரணியில் தமிழ்நாடு" என்னும் புதிய உறுப்பினர் சேர்க்கையை கழகம் முன்னெடுக்க வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை நிர்வாகிகள் கண்காணித்து வெற்றிகரமாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Update: 2025-06-01 06:49 GMT

Linked news