அதிமுக யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை - எடப்பாடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025
அதிமுக யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி
கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திமுக தான் நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது. அதிமுக யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை..
அதிமுக ஆட்சி காலத்தில் சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தோம். தமிழகத்தில் நாள்தோறும் குற்றச் செயல்கள் நடக்கின்றன.
16 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது ஏன் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை.
தூர்வாராததால் பந்தல்குடி கால்வாயை திரைச்சீலை கொண்டு மூடினர். கால்வாயை திரைச்சீலை கொண்டு மூடும் அளவுக்கு அவல ஆட்சி நடைபெறுகிறது” என்று அவர் கூறினார்.
Update: 2025-06-01 10:01 GMT