"தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025

"தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால்.." எச்சரிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. பொதுக்குழுவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக்கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்க விட மாட்டார்கள். பிற்போக்குத்தனங்களில் நம்மை மூழ்கடிப்பார்கள். தொழில் வளர்ச்சி இருக்காது.

இந்தி மொழித் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு செய்து, தமிழ்நாட்டின் தனித்துவத்தையே அழித்துவிடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Update: 2025-06-01 11:14 GMT

Linked news