தமிழகத்தில் நடக்கும் ரெயில்வே திட்டங்களுக்கு,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025

தமிழகத்தில் நடக்கும் ரெயில்வே திட்டங்களுக்கு, மத்திய பட்ஜெட்டில், 6,626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், புதிய ரெயில் பாதை திட்டங்களுக்கு மட்டும், 617 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் நடக்கும், 10 ரெயில் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை மட்டும், பல்வேறு காரணங்களை முன்வைத்து, தெற்கு ரயில்வே திருப்பி அனுப்பியது என தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.

அதில், நிதியை அடுத்த காலாண்டுகளுக்கு மாற்றுவது தொடர்பான தகவல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது. தெற்கு ரெயில்வேயில் நிதிப்பற்றாகுறை இல்லை. தேவைக்கேற்ப திட்டங்களுக்கு நிதி கிடைக்கிறது. காலாண்டிற்குள் முழுமையாக பயன்படுத்தப்படாத நிதி பிற திட்டங்களுக்கு மாற்றப்படுகிறது என தெரிவித்து உள்ளது.

Update: 2025-06-01 13:06 GMT

Linked news