மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா நகரில், இஸ்கான் ரத... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா நகரில், இஸ்கான் ரத யாத்திரையில் பயன்படுத்தப்படும் கடவுள் ஜெகந்நாதரின் தேருக்கு இனி, புதிய சுகோய் போர் விமானத்தின் டயர்கள் பயன்படுத்தப்படும். இதுவரை போயிங் 747 ரக விமானத்தின் டயர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதன் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.
ரஷியாவின் சுகோய் போர் விமானம், மேலே எழும்பியதும் மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்ல கூடிய திறன் படைத்தது. இந்த டயர்கள் இனி தேருக்கு பயன்படுத்தப்படும்போது, மணிக்கு 1.4 கி.மீ. என்ற வேகத்தில் தேர் எளிதில் நகர்ந்து செல்லும்.
Update: 2025-06-01 14:29 GMT