பீகாரில் ஜனசுராஜ் கட்சி தொண்டர் படுகொலை; ஐக்கிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 02-11-2025

பீகாரில் ஜனசுராஜ் கட்சி தொண்டர் படுகொலை; ஐக்கிய ஜனதாதள வேட்பாளர் நள்ளிரவில் கைது

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், ஜனசுராஜ் கட்சியை சேர்ந்த பியூஷ் பிரியதர்ஷி என்பவர் மொகமா தல் தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருக்காக வாக்குகள் கோரி பிரசாரத்தில் ஈடுபடும் பணியில் துலார்சந்த் யாதவ் (வயது 75) என்பவர் ஈடுபட்டு உள்ளார். ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தொண்டர் மற்றும் உள்ளூர் தலைவராகவும் இருந்துள்ளார்.

Update: 2025-11-02 04:14 GMT

Linked news