அண்ணா நினைவு நாள்: முதல்-அமைச்சர் தலைமையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 03-02-2025
அண்ணா நினைவு நாள்: முதல்-அமைச்சர் தலைமையில் தி.மு.க.வினர் அமைதிப் பேரணி
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.இந்நிலையில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.வினரின் அமைதி பேரணி தொடங்கியது. அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைகிறது.
இந்த பேரணியில் துணை முதல்-அமைச்சர் உள்ளிட்ட திமுகவின் இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், அனைத்து அணியினரும் இந்த அஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்றனர்
Update: 2025-02-03 03:41 GMT