செந்தில் பாலாஜியை கைது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-06-2025
செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரி பணியிட மாற்றம்?
சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குநர் பியூஷ் குமார் யாதவ், துணை இயக்குநர் கார்த்திக் தசாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.ஆர்.எஸ். (IRS) அதிகாரிகளான இருவரும் வருமான வரித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரி பியூஷ் குமார் யாதவ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-06-03 05:53 GMT