பொதுமக்களின் உயிரை பாதுகாப்பது அரசின் கடமை -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025
பொதுமக்களின் உயிரை பாதுகாப்பது அரசின் கடமை - ஐகோர்ட்டு மதுரை கிளை
ஐகோர்ட்டு மதுரை கிளையில் இன்று நடந்த விசாரணையின்போது, “யாரும் மக்களை கட்டாயப்படுத்தி வர சொல்லவில்லை. குடிமக்கள் எந்த கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கலாம். எந்த கட்சியாக இருந்தாலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது கடமை. அரசின் பாதுகாப்பு அமைப்பு முறையாக செயல்பட வேண்டும். பொதுமக்களின் உயிரை பாதுகாப்பது அரசின் கடமை. கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு அடிப்படை வசதிகள் அவசியம். குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தருவது அவசியம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
Update: 2025-10-03 07:24 GMT