மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடக்கிறது:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-05-2025
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடக்கிறது: மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
2025-2026-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் நீட் தேர்வை எழுத சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்ள 31 மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வு நடக்கிறது.
Update: 2025-05-04 02:55 GMT