பயம் என்பது தி.மு.க. அகராதியிலேயே கிடையாது - வைகோ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-05-2025
பயம் என்பது தி.மு.க. அகராதியிலேயே கிடையாது - வைகோ பேட்டி
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. அதே நேரத்தில், முஸ்லிம் இளைஞர்கள் சிலர் துணிச்சலுடன் செயல்பட்டு, மீதமுள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்த செய்தி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்தச் செய்தி ஊடகங்களில் விரிவாக வெளியிடப்படவில்லை” என்று கூறினார்.
Update: 2025-05-04 07:58 GMT