தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025
தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம்: அமைச்சர் ரகுபதி
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடைபெறாது.
இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழுகின்ற மாநிலம் தமிழ்நாடு. இதை பெரிய விவகாரமாக்கி அதில் லாபமடைய வேண்டும் என்று நினைக்கின்றனர். கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம்.
ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைபோல 2026 சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை” என்று அவர் கூறினார்.
Update: 2025-02-05 07:41 GMT