போராட்டம் நடத்தகூட கோர்ட்டு செல்லும் நிலைதான்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025
போராட்டம் நடத்தகூட கோர்ட்டு செல்லும் நிலைதான் எதிர்க்கட்சிகளுக்கு - வானதி சீனிவாசன் ஆவேசம்
கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், “தமிழக அரசை பற்றி விமர்சித்தால் பத்திரிக்கையாளர்கள் கூட தப்புவதில்லை. குண்டாஸ் போடும் அளவிற்கு அரசு உள்ளது. மோடியை விமர்சிக்காத ஊடகம் இல்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில்கூட கோர்ட்டு சென்று அனுமதி பெற்று தான் போராட்டம் நடத்த வேண்டிய நிலை தமிழக எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது.
திருப்பரங்குன்றம் என்றாலே முருகர் இருக்கும் இடம்... சிறுபான்மை மக்கள் வாக்குகளை வாங்குவதற்காக இரட்டை வேடம் போடுகிறீர்கள். கோர்ட்டுக்கு சென்று தான் அரசியலமைப்பு சட்டம் கொடுக்கும் உரிமை பெற வேண்டிய நிலை உள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது” என்று அவர் கூறினார்.