திருப்பரங்குன்றத்தில் நாளை மத நல்லிணக்க வழிபாடு -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025
திருப்பரங்குன்றத்தில் நாளை மத நல்லிணக்க வழிபாடு - காங்கிரஸ் அறிவிப்பு
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “நாளை (பிப்.06) திருப்பரங்குன்றம் கோவிலிலும், சிக்கந்தர் பாதுஷா தர்க்காவிலும் வழிபாடு செய்ய உள்ளோம். தமிழ்நாடு அரசு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மென்மையான போக்கை கடைபிடிக்கக் கூடாது
ஜனநாயகம்தான் எங்கள் கோட்பாடு, அதனை சீர்குலைக்க நினைப்பவர்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். பாஜக கவர்னர்களுக்கு சுப்ரீம்கோர்ட்டு எவ்வளவு அறிவுரை கூறினாலும் அவர்கள் திருந்துவதாக தெரியவில்லை.
இந்த தொகுதியின் எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்று எல்லா குறுக்கு வழியும் கையாள்கிறார்கள். முருகனிடம் உங்கள் அரசியல் எடுபடாது” என்று அவர் தெரிவித்தார்.
Update: 2025-02-05 07:54 GMT