ரூ.23 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-11-2025

ரூ.23 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனை: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 728 வெளிநோயாளிகள், 117 உள்நோயாளிகள், மாதத்திற்கு 105 பிரசவங்கள், 13,691 ஆய்வக பரிசோதனைகள், 677 USG Scan மற்றும் 204 பெரிய அறுவை சிகிச்சைகள் மற்றும் 707 சிறிய அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.23 கோடி செலவில் தரை மற்றும் நான்கு தளங்கள் கொண்ட புதிய மருத்துவக் கட்டடத்துடன் 225 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 

Update: 2025-11-05 10:01 GMT

Linked news