தமிழ்நாட்டில் பெண்கள் அதிக அளவில் பணிபுரியும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025
தமிழ்நாட்டில் பெண்கள் அதிக அளவில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மொத்த பெண் தொழிற்பணியாளர்களில் 41 சதவீத பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். தமிழ்நாட்டில் நிலவும் அமைதியான, வளர்ச்சிக்கு உகந்த சூழலால் புதிய தொழில் முதலீடுகள் வந்த வண்ணம் உள்ளன.
போதைப்பொருளுக்கு எதிராக பாரபட்சமற்ற கடுமையான அணுகுமுறையை இந்த அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், ஆராய்ச்சி, மருத்துவம் போன்ற துறைகளில் அரசு கவனம் செலுத்துகிறது என கவர்னர் உரையில் உள்ள விசயங்களை சபாநாயகர் அப்பாவு வாசித்துள்ளார்.
Update: 2025-01-06 05:44 GMT