தமிழக சட்டமன்றத்தின் மரபுகளை மாற்ற கவர்னர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025
தமிழக சட்டமன்றத்தின் மரபுகளை மாற்ற கவர்னர் முயற்சிக்கிறார் - அமைச்சர் சிவசங்கர்
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், "தமிழக சட்டசபையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடுவதுதான் மரபு. தேசிய கீதத்தை அவமதிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு எப்போதும் இருந்தது இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தான் பெரியவர் என்ற மனநிலையில் கவர்னர் செயல்படுகிறார். தமிழக சட்டமன்றத்தின் மரபுகளை மாற்ற கவர்னர் முயற்சிக்கிறார்" என்று கூறினார்.
Update: 2025-01-06 06:40 GMT