பொங்கல் பண்டிகை; 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025
பொங்கல் பண்டிகை; 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு
பொங்கல் பண்டிகையையொட்டி 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கு இடையேயும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 15,800 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
Update: 2025-01-06 07:25 GMT