பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-01-2026

பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து 


ஈரோடு - கரூர் இடையே சாவடிப்பாளையம், ஊஞ்சலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் 6-ந் தேதி, 13-ந் தேதி, 17-ந் தேதி ஆகிய நாட்களில் திருச்சி- ஈரோடு, செங்கோட்டை- ஈரோடு, ஈரோடு -செங்கோட்டை ஆகிய ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதில் திருச்சி - ஈரோடு (வண்டி எண்.56809) ரெயில் காலை 7 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு கரூர் வரை இயக்கப்படுகிறது. அதாவது கரூர் முதல் ஈரோடு வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

Update: 2026-01-06 04:39 GMT

Linked news