திமுகவின் ஊழல் பட்டியலை கவர்னரிடம் வழங்கி உள்ளோம்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-01-2026

திமுகவின் ஊழல் பட்டியலை கவர்னரிடம் வழங்கி உள்ளோம் - எடப்பாடி பழனிசாமி

கவர்னரை சந்தித்தப்பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த பட்டியலை கவர்னரிடம் வழங்கி உள்ளோம். பல்வேறு துறைகளில் அடிக்கப்பட்ட ஊழல்களுக்கு ஆதாரம் உள்ளதால், முழுமையான விசாரணைக்கும் வலியுறுத்தி உள்ளோம்.

திமுக ஆட்சியில் ஊழல் பற்றி விசாரிக்க ஆணையம் தேவை. ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளேன். கடந்த 56 மாதங்களாக கார்ப்ரேட் நிறுவனம்போல், அதிகார வர்க்கத்தின் உச்சத்தில் இருக்கும் திமுக குடும்பம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து தமிழ்நாட்டை மிகப்பெரிய கடன் சுமையில் தள்ளியுள்ளது

இவ்வாறு அவர் கூறினார். 

Update: 2026-01-06 06:51 GMT

Linked news