ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகள் - சி.பி.ஐ.க்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 06-02-2025
ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகள் - சி.பி.ஐ.க்கு மாற்ற கோரி பா.ஜ.க. மனு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
ஞானசேகரனுக்கு எதிரான 20 வழக்குகளை சி.பி.ஐ.க்கோ அல்லது சிறப்பு புலனாய்வு குழுக்கோ மாற்ற வேண்டும் என பா.ஜ.க. வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழக காவல் துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
Update: 2025-02-06 14:28 GMT