பா.ஜ.க.வின் முதல் மாநாடு நடைபெறும் இடம் பற்றிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-07-2025
பா.ஜ.க.வின் முதல் மாநாடு நடைபெறும் இடம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, தமிழக சட்டசபை தேர்தலையொட்டி ஆகஸ்டு 15-ந்தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில், அ.தி.மு.க.வுக்கு நாம் சுமை அல்ல. கூட்டணியில் நாம் இடம் பெற்றிருப்பது அ.தி.மு.க.வுக்கு பலம் சேர்க்கும் என காட்ட வேண்டும் என நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தி உள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில் நாம் செயலாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்த தேர்தலில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி ஆகியவை நமக்கான சவாலாக உள்ளன. இதேபோன்று தி.மு.க. ஆட்சிக்கு எதிரான மனநிலை, ஆபரேஷன் சிந்தூர், அ.தி.மு.க. கூட்டணி ஆகியவை சாதகங்களாக உள்ள விசயங்களாக பார்க்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-07-06 07:49 GMT