நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேபாளத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-01-2025
நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. இதனை தொடர்ந்து, டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. பீகாரின் முசாபர்பூர், மோதிஹாரி மற்றும் பெட்டையா மாவட்டங்களிலும் உணரப்பட்டது.
இதேபோன்று, திபெத்தின் ஷிகத்சே நகரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-01-07 04:24 GMT