அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வசித்து வந்த 65... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-01-2025
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வசித்து வந்த 65 வயது முதியவர் ஒருவருக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அதிக தொற்றும் தன்மை கொண்ட எச்5என்1 ரக வைரசின் தாக்குதலுக்கு ஆளான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
அமெரிக்காவில் முதன்முறையாக பறவை காய்ச்சல் பாதிப்புக்கு ஒருவர் பலியாகி உள்ளார் என்று லூசியானா சுகாதார துறை தெரிவித்து உள்ளது.
Update: 2025-01-07 04:26 GMT