தி.மு.க.வின் கவர்னர் போராட்டம் பா.ம.க. வழக்கு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-01-2025
தி.மு.க.வின் கவர்னர் போராட்டம் பா.ம.க. வழக்கு
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் உரையாற்றாமல் புறப்பட்டு சென்றது நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கவர்னர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், கவர்னர் ஆர்.என். ரவியை கண்டித்து தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், ஆளுங்கட்சி போராட்டம் நடத்த ஒரே நாளில் எப்படி அனுமதியளிக்கப்பட்டது என கேள்வி எழுப்பிய பா.ம.க. இந்த அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டில் முறையிட முடிவு செய்யப்பட்டது. இதன்படி அக்கட்சியின் வழக்கறிஞர் கே.பாலு கோர்ட்டில் முறையீடு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து வழக்கு தாக்கல் செய்ய பா.ம.க.வுக்கு, ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளதுடன், மனு தாக்கல் செய்யப்பட்டால், அதுபற்றி நாளை விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.