டாஸ்மாக் விவகாரம் குறித்து பேச இபிஎஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025

டாஸ்மாக் விவகாரம் குறித்து பேச இபிஎஸ் முயற்சித்தபோது அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் இருக்கும் விவகாரத்தை பேரவையில் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் அப்பாவு கூறினார். இதனையடுத்து சட்டசபை தலைவர் அனுமதி மறுத்ததையொட்டி பதாகைகளுடன் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பேரவை விதி 92(1)ன் கீழ் நீதிமன்றத்தில் இருக்கும் விவகாரம் பற்றி விவாதிக்க முடியாது என அப்பாவு கூறினார். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று ஒருநாள் மட்டும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

Update: 2025-04-07 06:05 GMT

Linked news