மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025
மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறைக்கான மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை முதல் 13-ந்தேதி வரையிலான நாட்களில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் 9-ந்தேதி (நாளை மறுநாள்), இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் பொருளாதார மற்றும் நிதிக்கான மந்திரிகள் மட்டத்திலான 13-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற முடிவாகி உள்ளது.
சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் அவர் முக்கிய உரையாற்ற உள்ளார். அதனுடன் அந்த நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள், வர்த்தக தலைவர்களுடன் இருதரப்பு கூட்டங்களையும் நடத்துகிறார்.
Update: 2025-04-07 14:11 GMT