பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள்: ஐகோர்ட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-06-2025

பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள்: ஐகோர்ட்டு நீதிபதி காட்டம்

கோவை குவாரி மோசடி வழக்கில் குவாரி உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி, தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கிறார்கள், என வேதனை தெரிவித்தார்.

குவாரி மூடப்பட்டதாக அறிக்கை தந்துவிட்டு, மறுபுறம் குவாரி செயல்பட அதிகாரிகள் அனுமதி அளிக்கிறார்கள். எனவே, குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கவேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.

Update: 2025-06-07 06:48 GMT

Linked news