பாதுகாப்பு வாகனங்கள் மீது லாரி மோதியது..... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-06-2025
பாதுகாப்பு வாகனங்கள் மீது லாரி மோதியது.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தேஜஸ்வி
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் பீகார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் இன்று காலை வைஷாலி மாவட்டத்தில் காரில் சென்றுகொண்டிருந்தார். அவருடன் போலீசார் மற்றும் பாதுகாவலர்கள் வாகனங்களில் அணிவகுத்துச் சென்றனர். அப்போது அதிவேகமாக வந்த லாரி, கான்வாயில் புகுந்து பாதுகாப்பு வாகனங்கள் மீது மோதியது. இதில் 2 வாகனங்கள் சேதமடைந்தன. 3 பேர் காயமடைந்தனர். தேஜஸ்வி சென்ற கார் மீது லாரி மோதவில்லை. இதனால் அவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
Update: 2025-06-07 07:52 GMT