சிக்கிம் நிலச்சரிவு... ராணுவ முகாமில் சிக்கித்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-06-2025
சிக்கிம் நிலச்சரிவு... ராணுவ முகாமில் சிக்கித் தவித்த 76 வீரர்கள் மீட்பு
சிக்கிம் மாநிலத்தின் வடக்குப்பகுதியில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதன் காரணமாக சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இப்பகுதியில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். இதேபோல் சாட்டன் ராணுவ முகாமில் சிக்கித் தவித்த 76 ராணுவ வீரர்கள், பாதுகாப்பாக ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.
சாட்டன் ராணுவ முகாம் உள்ள பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். 6 வீரர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
Update: 2025-06-07 08:14 GMT