பாலியல் குற்றத்தில் சிக்கியுள்ள ஜெப்ரி எப்ஸ்டைன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-06-2025
பாலியல் குற்றத்தில் சிக்கியுள்ள ஜெப்ரி எப்ஸ்டைன் தொடர்பாக வெளியிடப்படாத ஆவணங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் குறிப்பிடப்பட்டதாக எலான் மஸ்க் நேரடியாக குற்றம்சாட்டி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதன் காரணமாகவே பொதுவெளியில் ஆவணங்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
எலான் மஸ்க்கின் இந்த செயலால் அதிருப்தி தெரிவித்திருந்த வெள்ளை மாளிகை, அதிபர் டிரம்ப் மீதான இந்தக் குற்றச்சாட்டு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியிருந்தது. இந்த நிலையில், அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த எக்ஸ்தளப் பதிவை எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.
Update: 2025-06-07 11:38 GMT