கவன ஈர்ப்பு தீர்மானம்- முதலமைச்சர் பதிலுரை அண்ணா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-01-2025
கவன ஈர்ப்பு தீர்மானம்- முதலமைச்சர் பதிலுரை
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானம் மீதான விவாதத்தைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். அப்போது, மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை கொடூரமானது என்று கூறிய அவர், சம்பந்தப்பட்ட குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.
குற்றவாளியை கைது செய்யாமல் விட்டிருந்தால் அரசை குறை கூறலாம் என்றும், இந்த விஷயத்தில் மலிவான அரசியலில் ஈடுபடவேண்டாம் என்றும் முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
Update: 2025-01-08 06:19 GMT