பொள்ளாச்சி பாலியல் வழக்கு: முதலமைச்சரின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-01-2025
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: முதலமைச்சரின் பேச்சுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கியபோது பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பேசினார். அப்போது பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அ.தி.மு.கவினருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததாகவும் அப்போதைய அ.தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்றும் கேள்வி எழுப்பினார். முதல்-அமைச்சரின் பேச்சுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.
Update: 2025-01-08 06:25 GMT