லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே வேகமாக பரவும் காட்டுத் தீ ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-01-2025

லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே வேகமாக பரவும் காட்டுத் தீ

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அருகில் உள்ள பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. மேற்குப் பகுதியில், நேற்று காலை பரவத் தொடங்கிய தீ இரவு வரை கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்தது. மலையை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் காட்டுத் தீ சூழ்ந்ததால் பல வீடுகள் கருகின. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதேபோல் லாஸ் ஏஞ்சல்ஸின் வடகிழக்கில் உள்ள மலையடிவாரத்திலும் காட்டுத்தீ பரவியது. கடுமையான காற்று வீசுவதால் தீ வேகமாக பரவி வருகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 

Update: 2025-01-08 07:05 GMT

Linked news