நாட்டில் தமிழகம், குஜராத், மராட்டியம் உள்ளிட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-01-2025
நாட்டில் தமிழகம், குஜராத், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்நிலையில், எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்புகளை தொடர்ந்து திருப்பதி வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
தொற்று பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் முக கவசம் அணிந்து வர அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். சொர்க்கவாசல் திறப்புக்கு அதிக பக்தர்கள் வரக்கூடும் என்பதற்காக கட்டாயம் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Update: 2025-01-08 08:14 GMT