கடலூர் ரெயில் விபத்து: கேட் கீப்பர் பங்கஜ் சர்மா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025

கடலூர் ரெயில் விபத்து: கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது


கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார். ரெயில்வே கேட்டை மூடாமல் பள்ளி வாகனத்தை அனுமதித்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வேன் ஓட்டுநர் கேட்டுக்கொண்டதன் பேரில் ரெயில்வே கேட்டை திறந்ததாக கேட் கீப்பர் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2025-07-08 05:57 GMT

Linked news