இந்திய விமானப்படையின் 93வது தொடக்க தினம்: பிரதமர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-10-2025
இந்திய விமானப்படையின் 93வது தொடக்க தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
விமானப்படை தினத்தன்று அனைத்து துணிச்சலான விமான வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள். இந்திய விமானப்படை துணிச்சல், ஒழுக்கம் மற்றும் துல்லியத்தை எடுத்துக்காட்டுகிறது. மிகவும் சவாலான சூழ்நிலைகள் உட்பட, நமது வானத்தைப் பாதுகாப்பதில் அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இயற்கை பேரிடர்களின் போது அவர்களின் பங்கும் மிகவும் பாராட்டத்தக்கது. அவர்களின் அர்ப்பணிப்பு, தொழில்முறை மற்றும் வெல்ல முடியாத மனப்பான்மை ஒவ்வொரு இந்தியரையும் தொடர்ந்து பெருமைப்படுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-10-08 05:17 GMT