தலைமைப்பதவியில் 25 ஆண்டுகால பயணம்: பிரதமர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-10-2025
தலைமைப்பதவியில் 25 ஆண்டுகால பயணம்: பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரியாக பதவி வகித்து, பின்னர் பிரதமராக பொறுப்பேற்று நேற்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. மேலும் இந்த வாய்ப்புக்காக இந்திய மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி அவர் குஜராத் முதல்- மந்திரியாக பதவியேற்றார். அப்போது முதல் தற்போது வரை அவரது பயணம் பற்றிய விவரங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், தலைமைப்பதவியில் 25 ஆண்டுகாலம் நிறைவு செய்த பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Update: 2025-10-08 05:22 GMT