நடிகர்கள் மம்முட்டி, துல்கர் சல்மான், பிரித்விராஜ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-10-2025
நடிகர்கள் மம்முட்டி, துல்கர் சல்மான், பிரித்விராஜ் தொடர்புடைய 17 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
நடிகர்கள் மம்முட்டி, துல்கர் சல்மான், பிரித்விராஜ் தொடர்புடைய 17 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் அபிராமபுரத்தில் உள்ள துல்கர் சல்மானின் வீட்டில் 8 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கொச்சியில் உள்ள துல்கர் சல்மானின் வீடு மற்றும் கோழிக்கோட்டில் உள்ள சொகுசு கார் ஷோ ரூமிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
சொகுசு கார்களுக்கான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-10-08 05:30 GMT