காங்கிரஸ் கட்சி மக்களிடையே சாதி, மத மோதலை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
காங்கிரஸ் கட்சி மக்களிடையே சாதி, மத மோதலை உருவாக்குகிறது: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதன்படி, முதல்கட்ட தேர்தல் கடந்த 6-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்து முடிந்தது. இதில் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதனை தொடர்ந்து, 2-வது கட்ட தேர்தல் வருகிற செவ்வாய் கிழமை நடைபெற உள்ளது. இதற்கான பிரசார பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
Update: 2025-11-08 09:49 GMT