உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல்; 10 மீட்டர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025

உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல்; 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்ற இளவேனில் வாலறிவன்

எகிப்து நாட்டில் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவரான இளவேனில் வாலறிவன் (வயது 26) இன்று நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் சிறப்பாக செயல்பட்டார். போட்டியின் இறுதி வரை முன்னணி வகித்த அவர், தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19-வது சுடுதலுக்கு பின்னர் சரிவை சந்தித்து, 3-வது இடத்திற்கு சென்றார். இதனால், இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

எனினும் அவர், 232 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து, வெண்கல பதக்கம் வென்றார். தென் கொரியாவின் பான் ஹியோஜின் (255 புள்ளிகள்) முதல் இடமும், சீனாவின் வாங் ஜைபெய் (254 புள்ளிகள்) 2-வது இடமும் பிடித்தனர்.

Update: 2025-11-08 14:26 GMT

Linked news