த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை கூடுகிறது ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-01-2025
த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை கூடுகிறது
தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார் என தகவல் வெளிவந்து உள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள மாவட்ட செயலாளர்கள் பனையூர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
த.வெ.க மாவட்ட செயலாளர்கள், அணி தலைவர்கள் நாளை இறுதி செய்யப்பட உள்ளனர். இதற்காக வாக்கெடுப்பு முறை நடைபெறும். அதன் அடிப்படையில் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Update: 2025-01-09 06:38 GMT