தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-01-2025

தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இரண்டு நாட்கள் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் விழாவில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. ஆட்சிக்கு வந்தது முதல் இந்த வளர்ச்சியே போதும் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை. தமிழ்நாட்டுக்கு இன்னும் வளர்ச்சி வேண்டும் என்று இந்த அரசு செயல்பட்டு வருகிறது. நகரத்தில் மட்டும் வளர்ச்சி குவியக்கூடாது; அனைத்து பகுதிகளும் சமச்சீராக வளர வேண்டும்" என்று கூறினார்.

Update: 2025-01-09 06:43 GMT

Linked news