சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் நேசனல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 09-02-2025
சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் நேசனல் பார்க் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மாவட்ட ரிசர்வ் படை மற்றும் சிறப்பு அதிரடி படை உள்ளிட்ட வீரர்கள் இணைந்து இன்று காலை சென்றபோது, நக்சலைட்டுகள் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதனை தொடர்ந்து, வீரர்களும் பதிலடியாக அவர்களை நோக்கி சுட்டனர். இந்த சண்டையில் 2 வீரர்கள் மரணம் அடைந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர். இந்த மோதலில் 31 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
Update: 2025-02-09 12:03 GMT