ஆபரேசன் சிந்தூர்: பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025
ஆபரேசன் சிந்தூர்: பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது - உறுதி செய்த விமானப்படை
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 6 பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆபரேசன் சிந்தூர் குறித்து பேசிய விமானப்படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் ஏ.பி. சிங், “பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்திய விமானப்படையின் S-400 மூலம் பாக். போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன” என்று அவர் கூறினார்.
வானில் நடுவில் தாக்கப்பட்ட ஆறு விமானங்களைத் தவிர, இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல்களில் பாகிஸ்தான் விமானப்படை தரையில் சந்தித்த இழப்புகளையும் ஏ.பி. சிங் உறுதிப்படுத்தினார்.
Update: 2025-08-09 08:04 GMT