தி.மு.க. இலக்கிய அணி தலைவராக அன்வர்ராஜா நியமனம் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025

தி.மு.க. இலக்கிய அணி தலைவராக அன்வர்ராஜா நியமனம் - துரைமுருகன் அறிவிப்பு

அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அ.அன்வர்ராஜா, சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்தார். தற்போது அவருக்கு தி.மு.க.வில் இலக்கிய அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

புலவர் இந்திரகுமாரி வகித்து வந்த தி.மு.க. இலக்கிய அணித் தலைவர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் அ.அன்வர்ராஜா நியமிக்கப்படுகிறார்.

தி.மு.க. சட்ட திட்ட விதி 31 பிரிவு 10-ன்படி தி.மு.க. இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் அ.அன்வர்ராஜா தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Update: 2025-08-09 08:15 GMT

Linked news