தமிழ்நாட்டை கட்டமைப்பதே திராவிட மாடல் அரசின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025
தமிழ்நாட்டை கட்டமைப்பதே திராவிட மாடல் அரசின் மாபெரும் கனவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோவை கொடிசியா மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறும் உலக புத்தொழில் மாநாடு 2025ஐ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநாட்டில் மாற்றுத்திறனாளிகள் 5 பேர் மற்றும் மாற்றுப் பாலினத்தவர் 4 பேருக்கு தொழில் தொடங்குவதற்கான ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து உலக புத்தொழில் மாநாட்டில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் , “உலகின் தலை சிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதுதான் திராவிட மாடல் அரசின் மாபெரும் கனவு. கடந்த 4 ஆண்டுகளில் 6 மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் ஒன்றிய அரசின் தளத்தில் புதிதாக பதிவாகி உள்ளன. 2032ஆக இருந்த எண்ணிக்கை இப்போது 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் எனக்கு பர்ஷனலா மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இந்த 12 ஆயிரத்தில் சரிபாதி பெண்கள் தலைமையேற்று நடத்துகிற நிறுவனங்கள் தான்” என்று கூறினார்.
தமிழ்நாட்டை உலகின் முன்னணி ஸ்டார்ட் அப் மையங்களில் ஒன்றாக நிலைநிறுத்த மாநாடு நடைபெறுகிறது. புத்தொழில் மாநாட்டில் 42 நாடுகளை சேர்ந்த 300 பிரதிநிதிகள், 30 ஆயிரம் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.