எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025

எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அவசர பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் இன்று எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்எல்எஸ். சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் ஜி. ஆர்.சண்முகப்பா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர்.

Update: 2025-10-09 14:02 GMT

Linked news