பெண்கள் உலகக் கோப்பை: தென்ஆப்பிரிக்காவுக்கு 252... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025
பெண்கள் உலகக் கோப்பை: தென்ஆப்பிரிக்காவுக்கு 252 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிர்தி மந்தனா இருவரும் சிறப்பாக விளையாடி முறையே 37 மற்றும் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளில் ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து 94 ரன்கள் குவித்தார். சினே ராணா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 49.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 251 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து வருகிறது.
Update: 2025-10-09 14:10 GMT